முகப்பு
இந்தியா

23 நாள்களாக இறங்குமுகம்: பெட்ரோல் விலை ரூ.81.08, டீசல் ரூ.76.89 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 23 நாள்களாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக, இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.08 ஆகவும்

Updated On : 9 நவம்பர் 2018, 7:18 am IST
பகிர்:


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 23 நாள்களாக சரிந்து வருகிறது. இதன் காரணமாக, இன்று பெட்ரோல் விலை லிட்டர் ரூ.81.08 ஆகவும், டீசல் விலை லிட்டர் ரூ.76.89 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் தொடங்கி, இரண்டு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது விலை சற்று குறைந்து வருவது ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 15 பைசாவும் இன்று வெள்ளிக்கிழமை (நவ.9)  குறைக்கப்பட்டதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Advertisement

Advertisement

இதன்படி, கலால் வரி மிகக் குறைவானதாகக் கருதப்படும் தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.06 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.72.74 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாட்டிலேயே மிக அதிகமாக கலால் வரி விதிக்கப்படும் மும்பையில், இன்று பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.83.57 மற்றும் ரூ.76.22 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விலை ஏறியது எப்படி?: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு ஏற்பட்டதாலும் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

கடந்த மாதம் 4-ஆம் தேதி பெட்ரோல், டீசலின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அன்றைய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் தில்லியில் ரூ.84-ஆகவும், மும்பையில் ரூ.91.34-ஆகவும் இருந்தது. டீசல் லிட்டருக்கு ரூ.75.45 என்ற அளவில் தில்லியிலும், ரூ.80.10 என்ற அளவில் மும்பையிலும் அன்றைய தினத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.86-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6.73 என்ற அளவிலும் அதிகரித்து காணப்பட்டது.

அதே நாளில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.1.50 காசுகள் குறைப்பதாக மத்திய அரசு அறிவித்ததுடன், எண்ணெய் நிறுவனங்கள் மேலும் ரூ.1 குறைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆக மொத்தம், இரண்டின் விலையிலும் ரூ.2.50 வரை குறைக்கப்பட்டது.

இருப்பினும், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, அக்டோபர் 17-ஆம் தேதி வரையில் பெட்ரோல், டீசலின் விலை ஏறுமுகமாகவே இருந்தது. அதற்கு அடுத்த நாளில் இருந்து அவற்றின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இனி வரும் நாள்களில், பெட்ரோல், டீசலின் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments