"மோடி-போஃபியா'வால் எதிர்க்கட்சிகள் பாதிப்பு
""எதிர்க் கட்சிகள் "நரேந்திர மோடி- போஃபியா (அச்சம்)' காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்'' என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார்.
""எதிர்க் கட்சிகள் "நரேந்திர மோடி- போஃபியா (அச்சம்)' காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்'' என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பேரணி ஒன்றைத் தொடங்கி வைத்து பேசிய அமித் ஷா, கடந்த 4 தலைமுறைகளாக நாட்டை ஆட்சி செய்த நேரு- இந்திரா காந்தி குடும்பம் நாட்டின் நன்மைக்காக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர் பேசும் போது, "எதிர்க்கட்சிகள் நரேந்திர மோடி- போபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் மோடியை பிரதமர் பதவியை விட்டு விலக்கி வைக்க வேண்டும் என்று மட்டுமே நினைக்கின்றன. ஆனால், நாங்கள் (பாஜக ஆட்சி) வறுமை, பாதுகாப்பின்மை, காற்று மாசுபடுதல் போன்ற தேவையில்லாதவற்றையே மக்களிடம் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என தொடர்ந்து பாடுபடுகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு 129 வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் நான்கு தலைமுறை (நேரு, இந்திரா காந்தி) குடும்பம் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்தது என்பதை தெரிவிக்க முடியுமா?
சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய பேரணி ஒன்றில் பங்கேற்ற ராகுல்காந்தி தான் உரையாற்றிய 22 நிமிடங்களில் மோடியின் பெயரை 44 முறை உச்சரித்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவாக பேரணி நடத்தினாரா? காங்கிரஸþக்கு ஆதரவாக நடத்தினாரா? என்று நானே ஆச்சர்யப்படும் வகையில் அப்பேரணி அமைந்திருந்தது. இதே ஆச்சர்யம் தான் மக்களவையில் ராகுல், மோடியை வெறித்தனமாக கட்டிப்பிடித்த போதும் எனக்கு ஏற்பட்டது' என்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், 2016ஆம் ஆண்டு காஷ்மீர் பயங்கரவாதிகள் உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய போது நாடே கொந்தளித்தது. இதற்கு பதிலடியாக எல்லைக்கு அப்பால் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழிக்கும் துல்லியத் தாக்குதல் நடத்த மோடி உத்தரவிட்டார். உலகளவில் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு அடுத்தபடியாக தனது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவும், பழி வாங்கும் வகையிலும் இத்தாக்குதல் நடவடிக்கை அமைந்திருந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தின் போது 2014ம் ஆண்டு வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியா உலகளவில் 9வது இடத்தில் இருந்தது. தற்போது, பாஜக ஆட்சியில் 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில் உலகளவில் 5ஆம் இடத்தில் உள்ள பிரிட்டனை முறியடித்து இந்தியா அந்த இடத்திற்கு முன்னேறும், என்று அமித் ஷா தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.