நாடு முழுவதும் விரைவில் 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.களுக்கு மூடு விழா? : அதிர்ச்சித் தகவல்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புது தில்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து நாடு முழுவதும் மொத்தம் 2 லட்சம் ஏ.டி.எம்கள் செயல்பட்டு வருகின்றன . இவைகள் அனைத்தும் தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஒரு 1.15 லட்சம் வங்கி ஏ.டி.எம்.கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக ஏ.டி.எம்களை நிர்வகிக்கும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பயன்பாட்டில் உள்ள ஏ.டி.எம்களின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்டபல விதிகள் வங்கிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது செயல்படும் ஏடிஎம்களில் பாதிக்கும் மேற்பட்டவை மூடப்படும் அபாயம் உள்ளது.
மேலும் ஏ.டி.எம்., களை நிர்வகிக்க தேவையான செலவினம் கூடி வருவதால் நிதி நிலைமை மோசமடைந்து வருகிறது. சேவை வழங்குவற்கான கட்டணங்கள், பராமரிப்பு கட்டணங்கள், அதிகரித்து வரும் பலவகை கூடுதல் செலவினங்களை சந்திப்பதற்கான திட்டங்கள் எதையும் வங்கிகளும் கொண்டிருக்கவில்லை.
இதனை வங்கிகள் விரைவில் சரி செய்யாத நிலையில் பெரிய அளவிலான ஏ.டி.எம்.களின் மூடலுக்குத்தான் இது வழி வகுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.