மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹிந்தி நடிகர் திலீப் குமார்
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் வீடு திரும்பினார்.
மும்பை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் வீடு திரும்பினார்.
பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் (95) நிமோனியா காய்ச்சல் காரணமாக மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திலீப் குமார் வீடு திரும்பினார் என்று அவரது நெருங்கிய நண்பர் தகவல் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
திலீப் குமார் உடல்நிலை குறித்து தகவல்களை அவரது குடும்பத்தின் சார்பாக பகிர்ந்து வரும் பைசல் பரூக்கி, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
திலீப் குமார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அவரை முழுமையாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்றினை தடுப்பதற்காக சில நாட்கள் தலைமையில் இருக்குமாறு கூறியுள்ளனர். உங்கள் அனைவரது பிராத்தனைகளுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துளார்
அந்தாஜ், ஆன், மதுமதி, தேவதாஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் திலீப் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.