மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்து
மும்பையில் புதனன்று மாலை மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குளானது.
மும்பை: மும்பையில் புதனன்று மாலை மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர் பயணம் செய்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குளானது.
மும்பையின் மரைன் ட்ரைவ் பகுதியில் இருந்து 3.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிவாஜி ஸ்மரக் காம்ப்ளெக்ஸ் பகுதியில் அரபிக் கடலில், சத்ரபதி சிவாஜி நினைவகம் அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டது.
அதற்கான பூஜைக்காக புதன் மாலை மஹாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளர், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்கள் என மொத்தம் 40 பேர் ஒரு படகில் குறிப்பிட்ட பகுதி நோக்கி பயணம் செய்தார்கள். சுமார் 04.15 மணியளவில் அந்தப் படகானது எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குளானது.
Advertisement
ஆனால் உடனடியாக இந்திய கடற்படை, கடற்கரையோர காவல் மற்றும் இதர அரசு நிறுவனங்கள் இணைந்து, இரண்டு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.