FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பல்கேரிய பிரதமருடன் ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவுக்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு பிரதமர் பாய்கோ போரிசோவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

30 ஜனவரி 2024, 10:12 pm IST
பல்கேரிய தலைநகர் சோஃபியாவில் அந்நாட்டு அதிபர் ரூமென் ராதேவை வியாழக்கிழமை சந்தித்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பகிர்:


ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவுக்குச் சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அந்நாட்டு பிரதமர் பாய்கோ போரிசோவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் குறித்து பல்கேரிய பிரதமரிடம் விளக்கினார். இதுகுறித்து ராம்நாத் கோவிந்தின் அலுவலகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பல்கேரிய பிரதமர் போரிசோவை ராம்நாத் கோவிந்த் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று கோவிந்த் வலியுறுத்தினார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உற்பத்தியை தொடங்க வருமாறு பல்கேரிய நிறுவனங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார் என்று அந்தச் சுட்டுரைப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தி சிலை திறப்பு: இதனிடையே, சோஃபியா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள செளத் பூங்காவில் மகாத்மா காந்தியின் சிலையை ராம்நாத் கோவிந்தும், பல்கேரிய அதிபர் ரூமென் ராதேவும் திறந்து வைத்தனர். 
நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், மகாத்மா காந்தி சிலை வடிவில் நிரந்தரமாக வசிப்பதற்கு அடைக்கலம் கொடுத்த பல்கேரிய மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார். அதைத் தொடர்ந்து, காந்தி எழுதிய ஹிந்து சுயராஜ்ஜியம் நுலை ரூமென் ராதேவுக்கு ராம்நாத் கோவிந்த் பரிசளித்தார்.
ராம்நாத் கோவிந்த், 3 ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். எட்டு நாள் சுற்றுப் பயணத்தின் முதல் கட்டமாக, சைப்ரஸ் நாட்டுக்குச் சென்ற அவர், அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பல்கேரியா வந்தார். பல்கேரியா பயணத்தை முடித்துக் கொண்டு அவர் செக் குடியரசு நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, ஐரோப்பிய நாடுகளின் முக்கியத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments