முகப்பு
இந்தியா

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராயரின் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு  

கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல்லின் முன்ஜாமீன் மனு விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Updated On : 18 செப்டம்பர் 2018, 7:58 pm IST
பகிர்:

திருவனந்தபுரம்: கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராயர் பிராங்கோ முலாக்கல்லின் முன்ஜாமீன் மனு விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜலந்தர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை மாவட்டத்தின் பேராயராக இருந்த ஃபிரான்கோ முலக்கல் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகாரை முன்வைத்தார். கடந்த 2014-இல் இருந்து 2016 வரையில் ஃபிரான்கோ பல்வேறு தருணங்களில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதைக் கேரள காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், அந்தப் பேராயரை வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளனர். 

அதேசமயம் கடந்த வெள்ளிக்கிழமை, பேராயர் மீது பாலியல் புகாரை முன்வைத்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை சம்பந்தப்பட்ட திருச்சபை வெளியிட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இந்நிலையில் பேராயர் பிராங்கோ முலாக்கல்லின் முன்ஜாமீன் மனு விசாரணை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
போலீசாரின் கைது நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு பிரான்கோ முலாக்கல் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை 25-ந் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

அத்துடன் அதே தேதியில் கேரள அரசு இதுதொடர்பாக விரிவான மனுதாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments