ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல்: 18 பேர் பலி
ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் அவந்திபுரா பகுதியில் சி.ஆர்.பி.எப் படை வீர்ரகளின் அணி ஒன்று வியாழன் அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது அவர்களின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் 'திடீர்' வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள்.
Advertisement
Advertisement
எதிர்பாராத இந்த தாக்குதலில் 18 வீரர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.
பலத்த காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த ரோந்து வாகனத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முஹம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.