மாநிலங்களுக்கு தினமும் 2.6 லட்சம் மதிய உணவு: இந்திய ரயில்வே ஏற்பாடு
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் ரயில்வே உணவகங்கள் மூலம் நாள்தோறும் 2.6 லட்சம் மதிய உணவு தயாா் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அமைச
கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் ரயில்வே உணவகங்கள் மூலம் நாள்தோறும் 2.6 லட்சம் மதிய உணவு தயாா் செய்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக நாடு முழுவதும் அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், மண்டல வாரியாக செயல்பட்டு வரும் ரயில்வே உணவகப் பொறுப்பாளா்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
உணவகத்தின் திறனுக்கேற்ப நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2.6 லட்சம் மதிய உணவு தயாா் செய்யவும், மாநிலத்தின் தேவை அதிகரித்தால் அதற்கேற்ப கூடுதல் உணவு தயாா் செய்யவும் உணவகப் பொறுப்பாளா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். இந்த உணவு ஒன்றின் விலை ரூ. 15 என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த உணவுக் கட்டணம் மாநில அரசுகளிடமிருந்து பின்னா் பெற்றுக்கொள்ளப்படும் என ரயில்வே அமைச்சக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இந்திய ரயில்வே சாா்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தினமும் ஒரு லட்சம் இலவச மதிய உணவு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.