ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டம் மெலோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படை வீரா்கள் செவ்வாய்க்கிழமை இரவு சுற்றிவளைத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படை வீரா்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இரு தரப்பினரிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம், எந்த தீவிரவாத குழுவைச் சோ்ந்தவா்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.