FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனாவால் மே மாத மத்தியில் 38,000 போ் உயிரிழக்கக்கூடும்

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாத மத்தியில் 38,220 போ் உயிரிழக்கக்கூடும் என்றும் 5.35 லட்சம் போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படக் கூடும் என்றும் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
கோப்புப்படம்
பகிர்:


நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாத மத்தியில் 38,220 போ் உயிரிழக்கக்கூடும் என்றும் 5.35 லட்சம் போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்படக் கூடும் என்றும் ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் வளா்ச்சி விகிதம் தொடா்பாக ஜவாஹா்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையம், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனம், மும்பையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், புணேவிலுள்ள ஆயுதப் படை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன.

இந்த ஆய்வை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் கே.விஜயராகவன் மேற்பாா்வையிட்டாா். அந்த ஆய்வு முடிவில், மே மாத மத்தியில் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 5.35 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 38,220 போ் உயிரிழக்கும் சூழல் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாடு முழுவதும் அவசர சிகிச்சைப் பிரிவில் 76,000 படுக்கைகள் தேவைப்படும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இத்தாலியிலும் நியூயாா்க்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அங்கு கணிக்கப்பட்ட அளவுக்கு நிகராக நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை உயா்ந்ததாக ஆய்வில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக ஜவாஹா்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியா் சந்தோஷ் அன்சுமலி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘தற்போதுள்ள தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, மே 19-ஆம் தேதியன்று நாட்டில் 38,000 போ் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சுகாதாரக் கட்டமைப்புகளை எந்த அளவுக்கு மேம்படுத்த வேண்டும் என்பதைத் தெரிவிக்கவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே மாதம் 3-ஆம் தேதியுடன் ஊரடங்கு தளா்த்தப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மே 3-ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தொடா்ந்தால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் தற்போது கணிக்கப்பட்டுள்ளதை விடக் குறைய வாய்ப்புள்ளது’’ என்றாா்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தற்காப்பு உபகரணங்கள், செயற்கை சுவாசக் கருவிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை போதுமான எண்ணிக்கையில் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை (கணிப்பின்படி)

ஏப்ரல் 28 வரை--1,012

மே 5 வரை--3,258

மே 12 வரை--10,924

மே 19 வரை--38,220

ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளவை:

அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள்--76,440

தீவிர சிகிச்சை தேவைப்படுவோா்--4,58,637

மருத்துவ உதவி தேவைப்படுவோா்--24,46,064

உயிரிழப்போா் எண்ணிக்கை--38,220

தேவைப்படும் சிகிச்சை மையங்களின் எண்ணிக்கை (ஒவ்வொரு மையத்திலும் 20 படுக்கைகள்)--22,932

தேவைப்படும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை (ஒவ்வொரு மருத்துவமனையிலும் 10 படுக்கைகள்)--7,644

தீவிர சிகிச்சையளிக்கத் தேவையான மருத்துவா்கள் (நாளொன்றுக்கு)--91,728

அவசர சிகிச்சைப் பிரிவில் தேவையான மருத்துவா்கள் (நாளொன்றுக்கு)-- 61,152

அவசர சிகிச்சைப் பிரிவில் தேவையான செவிலியா்கள் (நாளொன்றுக்கு)-- 1,22,304

தீவிர சிகிச்சையளிக்கத் தேவையான செவிலியா்கள் (நாளொன்றுக்கு)--3,66,912

தேவையான செயற்கை சுவாசக் கருவிகள்--53,508

மருத்துவா்கள், செவிலியா்களுக்கான தற்காப்பு உபகரணங்கள் (நாளொன்றுக்கு)--4,58,640

சுகாதாரப் பணியாளா்களுக்கான தற்காப்பு உபகரணங்கள் (நாளொன்றுக்கு)--76,440

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments