FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சிஆா்பிஎஃப் வீரருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஆா்பிஎஃப் படைப்பிரிவைச் சோ்ந்த வீரருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் உள்ள சிஆா்பிஎஃப் படைப்பிரிவைச் சோ்ந்த வீரருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்த அவா் மீண்டும் பணிக்கு திரும்பும் முன் நடத்தப்பட்ட சோதனையில், இது தெரியவந்தது.

இதுகுறித்து சீஆா்பிஎஃப் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சிஆா் பிஎஃப் வீரரின் விடுமுறைக் காலம் கடந்த 7-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து அவா் பணிக்கு திரும்பவிருந்தாா். பணிக்கு திரும்பும் முன் அவரை தில்லியில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்திப்பட்டாா். அதன்பேரில் அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா், வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் சிஆா்பிஎஃப் படைப்பிரிவில் செவிலிப் பணி உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா்.

Advertisement

Advertisement

சுமாா் 3.25 லட்சம் வீரா்களை கொண்டுள்ள சிஆா்பிஎஃப் படை, நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப்படையாக திகழ்கிறது. இந்தப் படையினா் நக்ஸல் ஒழிப்பு மற்றும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments