முகப்பு
இந்தியா

கரோனா மற்றும் கோழிக்கறி மீதான பயத்தைப் போக்க என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை சரிவு, பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டிருக்கிறது என்றால் சரி.. சம்பந்தமே இல்லாமல் இந்தியாவில் கோழிக்கறி விற்பனை சரிந்துள்ளதுதான் நகைச்சுவையான விஷயமாக உள்ளது.

Updated On : 29 பிப்ரவரி 2020, 11:37 am IST
பகிர்:

ஹைதராபாத்: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை சரிவு, பங்குச் சந்தை சரிவு ஏற்பட்டிருக்கிறது என்றால் சரி.. சம்பந்தமே இல்லாமல் இந்தியாவில் கோழிக்கறி விற்பனை சரிந்துள்ளதுதான் நகைச்சுவையான விஷயமாக உள்ளது.

கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலே, உலக நாடுகள் முழுவதும் பெரிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதும், அன்டார்டிகாவைத் தவிர பிற அனைத்துக் கண்டங்களுக்கும் கரோனா பரவிவிட்டது.

இந்த நிலையில், இந்தியாவில் கோழிகளுக்கு கரோனா பரவியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பிய பொய்யான தகவல்களால், கோழிக்கறி விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

Advertisement

Advertisement

தெலங்கானாவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கோழிக்கறி இறைச்சி விற்பனையை மீண்டும் சூடுபிடிக்க வைக்கும் முயற்சியாக ஹைதராபாத்தின் மக்கள் பிளாஸா மற்றும் நெக்லஸ் சாலையில் கோழிக்கறி மற்றும் முட்டை திருவிழா நடத்தப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெயில் பொறித்த கோழிக்கறியும், அவித்த முட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோழிப் பண்ணைகளின் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவீந்திர ரெட்டி கூறுகையில், பிப்ரவரி 5ம் தேதி முதல் 40% அளவுக்கு கோழிக்கறி நுகர்வு குறைந்துவிட்டது. எனவே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். நிகழ்ச்சிக்கு வந்த 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வறுத்தக் கோழியும் அவித்த முட்டையும் வழங்கியுளோம் என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments