புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து
புதுச்சேரி பல்கலைக்கழக்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூகளில் நடைபெறவிருந்த இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூகளில் நடைபெறவிருந்த இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக, பல மாவட்டங்களில் மாணவர்களுக்கு நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் மாற்றியமைத்தும், சில தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டும் வருகின்றன.
அந்தவகையில், புதுச்சேரி பல்கலையில் நடைபெறவிருந்த முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் நடைபெறவேண்டி இருந்த இறுதியாண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், செய்முறைத் தேர்வு மற்றும் உள்மதிப்பீட்டு (internal) மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.