இ20 எரிபொருளுக்கு எதிராக மக்கள் திரளுங்கள்! கேஜரிவால் அழைப்பு!
இ20 எரிபொருளுக்கு எதிரான ஆம் ஆத்மியின் பிரசாரம் பற்றி..
இ20 எரிபொருளுக்கு எதிரான ஆம் ஆத்மியின் பிரசாரம் தொடரும் என்றும் மக்கள் இதை தடுக்க விரும்பினால் பெருமளவில் இந்தப் போராட்டத்தில் இணைய திரளுமாறு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
இ20 எரிபொருளை எதிர்த்து மனுக்களுடன் பிரதமர் இல்லத்தை நோக்கி பேரணி நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால்,
மாநிலங்களில் இக்கொள்கையைச் செயல்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கும்.
Advertisement
Advertisement
கோவா, குஜராத்திலும் எங்களுக்குச் எம்எல்ஏ.க்கள் உள்ளனர். அங்கேயும் இ20 திட்டம் நிறைவேற்றப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைகளில் இதை எதிர்ப்பார்கள் என்று அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்றாலும், சமூக ஊடகங்களில் விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்ட போதிலும் அவர்கள் துணிச்சலுடன் பங்கேற்றனர்.
இ20 எரிபொருளுக்கு எதிரான 2.30 லட்சத்திற்கும் அதிகமான மனுக்களைச் சமர்ப்பிக்க, சுமார் 100 பேருடன் பிரதமர் இல்லத்தை நோக்கிச் செல்ல முயன்ற தன்னையும் மற்றும் பிற கட்சித் தலைவர்களை தில்லி காவல்துறை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் ஃபிரோஸ் ஷா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இ20 திட்டத்திலிருந்து மக்கள் விடுபட விரும்பினால், அவர்கள் பெருமளவில் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், இ20 திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்தும் வகையிலான பதிலைப் பெற்றதாகவும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கூறினார்.
எத்தனால் உற்பத்தியால் இந்திய விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்காது, மாறாக இக்கொள்கை அமெரிக்க விவசாயிகளுக்கே பயனளிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்திய விவசாயிகளை விட வெளிநாட்டு நலன்களுக்கே இக்கொள்கை முன்னுரிமை அளிப்பதாகக் குற்றம் சாட்டிய கேஜரிவால், அதிபர் டொனால்ட் டிரம்பின் "அழுத்தத்திற்கு அடிபணியாமல்", அமெரிக்காவிலிருந்து எத்தனால் இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடியை அவர் வலியுறுத்தினார்.
AAP national convener Arvind Kejriwal on Tuesday said his party's campaign against E20 fuel would continue and urged people to join the protest in large numbers if they wanted to stop its implementation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.