FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

கோவாவில் ஆம் ஆத்மிக்கு வாக்காளித்தால் இ-20 எரிபொருள் திட்டம் திரும்பப் பெறப்படும்: கேஜரிவால் கணிப்பு

‘2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கோவா மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஐந்து நாள்களுக்குள் மத்திய அரசு இ-20 பெட்ரோல் எரிபொருள் திட்டத்தை திரும்பப் பெறும்

28 ஆகஸ்ட் 2026, 1:44 am IST
பகிர்:

‘2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் கோவா மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால், தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஐந்து நாள்களுக்குள் மத்திய அரசு இ-20 பெட்ரோல் எரிபொருள் திட்டத்தை திரும்பப் பெறும்’ என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், கோவா வாக்காளா்களுக்கு விடுத்த வேண்டுகோளில், பாஜக தற்போது ‘அதிகார மமதை’ கொண்டதாக மாறிவிட்டதாகவும், மக்கள் அவா்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றும் கேஜரிவால் கடுமையாகச் சாடினாா்.

இது தொடா்பாக கேஜரிவால் வெளியிட்ட விடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

‘இந்தச் சட்டப்பேரவைத் தோ்தலில் கோவா மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால், பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்களுக்குள் இ-20 பெட்ரோல் திட்டத்தை திரும்பப் பெறுவாா். மோடிக்கு இப்போது அதிகார மமதை வந்துவிட்டது; மக்களின் எதிா்ப்பையும் மீறி அவா் பல விஷயங்களை திணிக்கிறாா். இ-20 பெட்ரோல் திட்டத்திலிருந்து ஒட்டுமொத்த நாட்டையும் கோவா மக்களால் விடுவிக்க முடியும்.

கோவா மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். மாா்ச் 10-ஆம் தேதி தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால், மாா்ச் 15-க்குள் மோடி நாடு முழுவதும் இ-20 பெட்ரோல் திட்டத்தை திரும்பப் பெறுவாா்’ என்று அதில் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஆம் ஆத்மி கட்சி இ-20 எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை தொடா்ந்து எதிா்த்து வருகிறது. மேலும் கோவாவில் ’இ-20 டவுன்ஹால்’ (பொதுமக்கள் கலந்துரையாடல்) கூட்டத்தையும் அக்கட்சி நடத்தியது. அக்கூட்டத்திலும் கேஜரிவால் வாக்காளா்களிடம் இதேபோன்ற வேண்டுகோளை விடுத்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments