FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் தூக்கிலிடப்பட்டனர்

நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

Updated On : 20 மார்ச் 2020, 5:32 am IST
பகிர்:


நிர்பயா பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரும் திகார் சிறையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

தில்லியில் கடந்த 2012, டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனு, கருணை மனு என குற்றவாளிகள் தங்களுக்கான சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தினர். எனினும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்படவில்லை. அவர்களை தூக்கிலிடும் தேதி மட்டும் இரண்டு முறை மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக மார்ச் 20-ஆம் தேதி அதிகாலை 5.30 மணி என நிர்ணயிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நால்வரையும் தூக்கிலிடுவதற்கான ஒத்திகையை அதற்கான சிறை ஊழியர் கடந்த புதன்கிழமை காலை நடத்தினார். இந்நிலையில், நால்வரும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்.

முன்னதாக, மரண தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை தில்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் நேற்று நள்ளிரவு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments