மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும்: மத்திய அரசு அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள், வங்கி சேவைகள் வழக்கம்போல இயங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா பரவல் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதிக்குப் பின் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில், மருத்துவமனைகள், நர்ஸிங் ஹோம்ஸ், கிளினிக், மருந்தகங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் தொடர்பான அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மருத்துவ பரிசோதனை மையங்கள், கரோனா தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் மருத்துவக் கூடங்கள், மருத்துவ சேவை தொடர்பான கட்டுமானப் பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொண்டு செல்வதற்கு தடையில்லை.
அதேபோன்று வங்கிகள், ஏடிஎம், நிதி சேவை நிறுவனங்கள், வங்கி சேவையுடன் தொடர்புடைய ஐடி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கும்.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்லலாம். ஆயில், சிலிண்டர், பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் வாகனங்கள் செல்ல தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.
அஞ்சல் சேவைகள், மின் சேவைகள், தகவல் தொடர்பு சேவைகள் தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மேற்குறிப்பிட்ட இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன் சமூட இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Article
ஏப். 20 முதல் அனைத்து சரக்குப் போக்குவரத்துகளுக்கும் அனுமதி
மே 3 ஆம் தேதி வரை எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?
கூரியர், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி: மத்திய அரசு
ஊரடங்கு நீட்டிப்பு: விவசாயம், தோட்டத்தொழிலுக்கு அனுமதி
ஊரடங்கு உத்தரவு: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
ஊரடங்கு: அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.