'வந்தே மாதரம்' என முழங்கிய இந்தியர்கள்: ஆப்கனிலிருந்து திரும்பிய நெகிழ்ச்சி 
இந்தியா

'வந்தே மாதரம்' என முழங்கிய இந்தியர்கள்: ஆப்கனிலிருந்து திரும்பிய நெகிழ்ச்சி

ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் சொந்தநாடு வந்தடைந்த மகிழ்ச்சியில் வந்தே மாதரம் என முழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN

ஆப்கானிஸ்தானிலிருந்து அழைத்துவரப்பட்ட இந்தியர்கள் சொந்தநாடு வந்தடைந்த மகிழ்ச்சியில் 'வந்தே மாதரம்' என முழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானை அமெரிக்கப் படைகளிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டிலுள்ள மக்கள் வெவ்வேறு நாடுகளுக்குச் செல்ல முயன்று வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் நாட்டினரை அந்தந்த நாடுகள் மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சிக்கியிருந்த தூதரக அதிகாரிகள் உள்பட 120 இந்தியர்கள் விமானப்படையின் மூலம் குஜராத் அழைத்து வரப்பட்டனர். 

விமான நிலையத்திலிருந்து பேருந்து மூலம் அழைத்துவரப்பட்டபோது சொந்த நாடு திரும்பிய நெகிழ்ச்சியில் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதாகி ஜே' என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 

அவசர நிலை கருதி ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு மின்னணு விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT