நேர கட்டுப்பாட்டை திரும்பபெற்ற அரசு: தில்லியில் கரோனா தளர்வுகள் அறிவிப்பு
தலைநகர் தில்லியில் கரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் தலைநகர் தில்லியில் கடைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு திரும்பபெறப்பட்டுள்ளது. கரோனா பரவல் குறைந்த நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பது வியாபாரிகளிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்பட அனைத்து கடைகளையும் இரவு 10 மணிக்கு மேலாக திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, திங்கள்கிழமை முதல் அமலுக்குவருகிறது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால், "தில்லியில் உள்ள சந்தைகள் 8 மணி வரை செயல்படவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கரோனா பரவல் குறைந்த நிலையில், இந்த கட்டுப்பாடு திரும்பபெறப்பட்டுள்ளது" என்றார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தலிபான் குறித்து சிறுமி எழுதிய கடிதம்: ஏஞ்சலினா ஜோலி உருக்கம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.