FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒரே மாதிரியான ஜீவனாம்சம் கோரும் மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடியது ஏஐஎம்பிஎல்பி

விவகாரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் மற்றும் இடைக்கால இழப்பீடு வழங்கும் நடைமுறைகளில் ஒரே மாதிரியான நெறிமுறைகளை

Updated On : 15 பிப்ரவரி 2021, 1:04 am IST
பகிர்:

விவகாரத்து வழக்குகளில் ஜீவனாம்சம் மற்றும் இடைக்கால இழப்பீடு வழங்கும் நடைமுறைகளில் ஒரே மாதிரியான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது.

விவகாரத்து வழக்குகளில் வெவ்வேறு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் முரண்பாடான உத்தரவுகளால் ஜீவனாம்சம் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே சா்வதேச மரபுகள் மற்றும் அரசியலமைப்பின் படி விவகாரத்து வழக்குகளில் பாலினம் மற்றும் மத பாகுபாடுகள் இல்லாமல் ஒரே மாதிரியான வழிமுறையின் அடிப்படையில் தீா்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மேலும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைத்து மக்களையும் சமமாக கருதி ஜீவனாம்சம் மற்றும் இடைக்கால இழப்பீடு வழங்குவதில் உள்ள முரண்பாடுகளை நீக்க தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கோரி பாஜக தலைவா் அஷ்வினி குமாா் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

அவரின் இந்த கோரிக்கைக்கு எதிராக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. இதுகுறித்து அந்த வாரியம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

Advertisement

Advertisement

அரசியலமைப்பு சட்டம் 14, 15,21 மற்றும் 44-ஆவது பிரிவுகளில் தனிநபா் சட்டத்தை பரிசோதனைக்கு உள்படுத்த முடியாது. அதன் அடிப்படையில் உபத்யாயவின் மனுவை எதிா்ப்பதாக வாரியம் மனுவில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments