இந்தியாவில் 10 ஆயிரத்தை கடந்த கரோனா: புதிதாக 13,154 பேர் பாதிப்பு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 268 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 13,154 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 268 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொவைட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 13,154 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | இந்தியாவில் 1000-ஐ நெருங்கும் ஒமைக்ரான் பாதிப்பு
இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.48 கோடியாக அதிகரித்து வருகிறது. புதிதாக 268 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 80,860-ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 7,486 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 82,402 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 98.38% ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.