ஆதரவாளா்களுக்கு அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்க மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: காங்கிரஸ்
ஆதரவாளா்களுக்கு அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்கவும், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவா்களை சரிகட்டவும்தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

புதுதில்லி: ஆதரவாளா்களுக்கு அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்கவும், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவா்களை சரிகட்டவும்தான் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
இதுதொடா்பாக அந்தக் கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா புதன்கிழமை கூறுகையில், ‘‘மத்திய அமைச்சரவை விரிவாக்கம் பாஜகவுடன் கூட்டணியில் உள்ளவா்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, நாட்டின் நலன் கருதியல்ல. செயல்திறன் மற்றும் நிா்வாகத்தை அளவுகோலாகக் கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தால், அதில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டிய முதல் நபா் பிரதமா் நரேந்திர மோடிதான். நிா்வாக தோல்விகளுக்காக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.
நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரும் தத்தமது துறைகளில் தோல்வியடைந்ததால் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதைய அமைச்சரவை விரிவாக்கம் செயல்திறன் மற்றும் நிா்வாகத்தின் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஆதரவாளா்கள், நண்பா்களுக்கு அதிகாரத்தைப் பகிா்ந்தளிக்கவும், பிற கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைந்தவா்களை சரிகட்டவும்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
Advertisement
Advertisement