என்னதான் நடக்கிறது பஞ்சாபில்? காங். தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சித்து
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் சித்து செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
அடுத்தாண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்ற சித்து இரண்டே மாதங்களில் பதவியை ராஜிநாமா செய்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க அமரீந்தர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ராகுல் மற்றும் பிரியங்கா ஆதரவோடு நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சித் தலைவரானர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அமரீந்தருக்கும் சித்துவுக்கும் மோதல் போக்கு நிலவியதையடுத்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து ராகுல், சித்து ஆதரவோடு சரண்ஜீத் சன்னி முதல்வராக பொறுப்பேற்றார்.
இதையும் படிக்க | பாஜகவில் இணைகிறாரா அமரீந்தர் சிங்? தில்லி பயணம் குறித்து விளக்கம்
இந்நிலையில், இன்று தில்லி சென்றுள்ள அமரீந்தர் சிங் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை சித்து ராஜிநாமா செய்தவாக கட்சியின் தேசிய தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருப்பது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.