முகப்பு
இந்தியா

இதுபோன்ற மோசமான அரசியலுக்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? - ராகுல் காந்தி கேள்வி

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களை ஆதரிப்பதும் பாஜகவின் அற்ப மனநிலையை காட்டுகிறது. இதுபோன்ற அரசியல் ஈடுபடுவதற்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

Updated On : 19 ஆகஸ்ட், 2022 at 11:21 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:36 PM

பெண்களுக்கு எதிரான குற்றம் புரிந்தவர்களை ஆதரிப்பதும் பாஜகவின் அற்ப மனநிலையை காட்டுகிறது. இதுபோன்ற அரசியல் ஈடுபடுவதற்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

குஜராத்தில் 2002-இல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு நடைபெற்ற வகுப்புவாத கலவரத்தில் கா்ப்பிணியான பில்கிஸ் பானுவை பாலியல் வன்கொடுமை செய்து, மூன்று வயது குழந்தை உள்பட அவரது குடும்பத்தினா் 7 பேரைக் கொன்ற வழக்கின் குற்றவாளிகள் 11 போ் தண்டனையை பூா்த்தி செய்ததால் குஜராத் அரசு சுதந்திர நாள் அன்று திங்கள்கிழமை விடுவிப்பதாக அறிவித்தது. சிறையில் இருந்து செவ்வாய்க்கிழமை விடுதலையான அவா்கள் இனிப்புகள் வழங்கியும் மாலைகள் அணிவித்தும் வரவேற்கப்பட்டனா்.

பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்த அந்த மாநில அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சிகள், ‘பெண் சக்தி’ குறித்து சுதந்திர நாள் விழாவில் பிரதமா் மோடி பேசிய சில மணி நேரத்தில், பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத்தில் பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதுதான் புதிய இந்தியாவின் உண்மை முகம் என்று விமா்சித்தன. 

Advertisement

இந்நிலையில், பில்கிஸ் பானு வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏ பேசியதற்கு  காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள பதிவில்,  "உன்னாவ் - பாஜக எம்எல்ஏவை காப்பாற்ற பாடுபட்டார். கதுவா - பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்தியது.  ஹத்ராஸ் - பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவாக பாஜக அரசு நின்றது. குஜராத் பாலியல் வழக்கு - பலாத்தகாரம் செய்தவர்களுக்கு விடுதலை மற்றும் கௌரவம். இதுபோன்று குற்றவாளிகளுக்கு பாஜக ஆதரவு அளிப்பது. பெண்களுக்கான பாஜகவின் அற்ப மனநிலையை பிரதிபலிக்கிறது. இதுபோன்ற அரசியல் ஈடுபடுவதற்கு வெட்கமாக இல்லையா பிரதமரே? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.