அப்பா... நீங்கள் கண்ட கனவை நனவாக்க முயற்சிப்பேன்: ராகுல் நெகிழ்ச்சி பதிவு!
அப்பா... நீங்கள் கண்ட கனவை நனவாக்க முயற்சிப்பேன் என்று தந்தை ராஜீவ்காந்தி பிறந்த நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அப்பா... நீங்கள் கண்ட கனவை நனவாக்க முயற்சிப்பேன் என்று தந்தை ராஜீவ்காந்தி பிறந்த நாளில் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பா... நீங்கள் கண்ட கனவை நனவாக்க முயற்சிப்பேன் என்று ராகுல் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அதில், அப்பா, ஒவ்வொரு நொடியும் என்னுடன், என் இதயத்தில் இருக்கிறீர்கள். நாட்டிற்காக நீங்கள் கண்ட கனவை நிறைவேற்ற நான் எப்போதும் முயற்சிப்பேன் என்று பதிவிட்டு அதில், ராஜீவ் காந்தி இருக்கும் ஒரு சிறப்பு விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.