FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கார்கில் விஜய் திவாஸ்: தில்லியில் போர் வீரர்கள் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு, தில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Updated On : 26 ஜூலை 2022, 11:57 am IST
பகிர்:

கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு, தில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் மே 3 ஆம் தேதி தொடங்கி 3 மாதங்களாக போர் நடைபெற்றது. 

‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த போரில் பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் பகுதிகளை கைப்பற்றி, இந்தியா வெற்றி பெற்றது. அதன்படி, இந்தியா வெற்றி பெற்ற நாளான ஜூலை 26 'கார்கில் விஜய் திவாஸ்' என கடைப்பிடிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

இந்நாளில் இந்திய தரப்பில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. 

தில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர். சௌத்ரி மற்றும் கடற்படை தளபதி ஹரி குமார் ஆகிய மூன்று படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments