FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹோலி பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

Updated On : 18 மார்ச் 2022, 8:56 am IST
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
பகிர்:

ஹோலி பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் உள்ள மக்களால் ஹோலி பண்டிகை இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி அல்லது வண்ணம் கலந்த நீரை ஊற்றி கொண்டாடுகின்றனர். 

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், பிகார், மேற்குவங்கம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இது வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

Advertisement

Advertisement

ஹோலி பண்டிகையையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  '

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். வண்ணங்களின் திருவிழாவான ஹோலி, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான ஒரு வாழும் உதாரணம். வசந்த கால வருகை குறித்த நல்ல செய்தியைக் கொண்டுவருகிறது.

ஹோலி திருவிழா, நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், புதிய ஆற்றலையும் ஏற்படுத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments