FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஹைதராபாத் கிடங்கில் தீ விபத்து: 11 தொழிலாளர்கள் பலி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 23 மார்ச் 2022, 9:28 am IST
பகிர்:

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கிடங்கு ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

ஹைதராபாத்தில் உள்ள போய்குடா பகுதியில் பழைய பொருள்கள் சேமித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. அதில் பணிகளை முடித்து முதல் தளத்தில் தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர். 

அதிகாலை 4 மணியளவில் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் முதல் தளத்திலிருந்து வெளியேற ஒரு வழிமட்டுமே இருந்ததால், ஊழியர்கள் வெளியேற முடியாமல் முதல் தளத்திலேயே சிக்கியதாக கூறப்படுகிறது.
 
தீ வேகமாகப் பரவியதால், 8 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 12 பேர் தீயில் சிக்கி உயிரிழந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்து 9  தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments