FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ட்விட்டரில் 'ப்ளூ டிக்' மீண்டும் நிறுத்திவைப்பு!

போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Updated On : 22 நவம்பர் 2022, 9:01 am IST
கோப்புப்படம்
பகிர்:

போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நிறுவனங்கள், தனிநபர்களை வேறுபடுத்தி காட்டும் வகையில் நிற வேறுபாடுகளுடன் பயன்படுத்த  ட்விட்டர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ட்விட்டா் பயன்பாட்டாளா்களின் அங்கீகரிக்கப்பட்ட கணக்கை குறிப்பிடும் நீல நிற குறியை (ப்ளூ டிக்) பெற மாதம் 8 அமெரிக்க டாலா் (ரூ.662) கட்டணமாக செலுத்த வேண்டும் என்று அதன் புதிய உரிமையாளா் எலான் மஸ்க் அறிவித்து இருந்தார்.

Advertisement

Advertisement

இதன்மூலம் ‘ப்ளூ டிக்’ பயனாளிகள் பதிலளிப்பதில், தேடுதலில், குறிப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், போலி தகவல்களை அழிப்பதற்கு இது உதவும் என்றும் அவா் குறிப்பிட்டார்.

மேலும், ட்விட்டரில் தகவல்களைப் பதிவிடுபவா்களுக்கு வருவாயை ஈட்டுவதற்கும் இந்தக் கட்டணம் உதவும் என்று எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், போலி கணக்குகளை அடையாளம் காணும்வரை 'ப்ளூ டிக்' குறியீடு நிறுத்திவைக்கப்படுவதாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments