FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை மக்களே... ஒரு வாரத்துக்கு குடை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம்!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மழை நீடிக்கும்.

Updated On : 3 ஆகஸ்ட் 2026, 1:02 pm IST
மழை - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் எனவும் குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீன் ஜான் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மக்களே, அடுத்த 6-7 நாள்களுக்கு குடை அல்லது ரெயின்கோட் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம். நாள்தோறும் நகர் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழையானது வழக்கமானதாக இருக்கும்.

Advertisement

Advertisement

மாலை 4 மணிக்கு மேல் வெளியே செல்வதாக இருந்தால், குடை மற்றும் ரெயின்கோட் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள். சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழையானது, திடீரென்று பெய்யக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், பல்வேறு பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று(ஆக. 3) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மழை தொடரும். இதே சூழல் ஒரு வாரத்துக்கு நீடிக்கும் என்று அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

summary

Tamil Nadu Weatherman Pradeep John has stated that Chennai and its suburbs will experience rain for a week, with a high probability of rainfall, particularly in the evenings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments