கோப்புப் படம் 
இந்தியா

காங்கிரஸில் இருக்கும்போது வந்த கூட்டத்தை விட தற்போது 4 மடங்கு வருவார்கள்: குலாம் நபி ஆசாத்

நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது பேசினால் 4 மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள் என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

DIN

நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது பேசினால் 4 மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள் என குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த குலாம் நபி ஆசாத் (73), கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து, கட்சியிலிருந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிா்வாகிகள் பலா் காங்கிரஸிலிருந்து வெளியேறினா்.

ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பது, உள்ளூா் மக்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்வது, காஷ்மீா் பண்டிட்களின் மறுகுடியமா்த்துதல் உள்ளிட்டவற்றை கொள்கைகளாக கொண்டு, தனது கட்சி செயல்படுமென அவா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தற்போது, ஜம்முவில் மக்களை சந்தித்தப் பிறகு குலாம் நபி ஆசாத் கூறியதாவது: 

நான் ஜம்முவில் சுமார் 400 பேரை சந்தித்து இருக்கிறேன். 30-35 சட்டப்பேரவை பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளேன். நான் எந்த கட்சியை தொடங்கினாலும் அவர்கள் எனக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். நான் காங்கிரஸில் பேசும்போது வந்த கூட்டத்தை விட தற்போது 4 மடங்கு அதிகமானவர்கள் வருவார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

பஞ்சாப் வெள்ளம்: மீட்புப் பணியில் முதல்வரின் ஹெலிகாப்டர்!

ரவி மோகன் தயாரிக்கும் ப்ரோ கோட் முன்னோட்ட விடியோ!

லட்சுமி மேனனை கைது செய்ய செப். 17 வரை இடைக்காலத் தடை!

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

SCROLL FOR NEXT