பாஜகவில் இணைந்த மேகாலயா எம்எல்ஏக்கள்!
மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
மேகாலயா மாநிலத்தில் ஆளும் கட்சியின் 2 எம்எல்ஏக்கள் உள்பட 4 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர்.
தில்லியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் ஃபெர்லின் சங்மா, சாமுவேல் சங்மா, பெனெடிக் மரக் மற்றும் ஹெச்.எம்.ஷாங்ப்லியாங் ஆகிய நால்வரும் பாஜகவில் இணைந்தனர்.
இதில் ஃபெர்லின் சங்மா, பெனெடிக் மரக் ஆகிய இருவரும் ஆளும் தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சமீபமாக பாஜகவுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.
Advertisement
Advertisement
மேலும் சாமுவேல் சங்மா சுயேச்சை எம்எல்ஏ. மற்றொரு எம்எல்ஏவான ஹெச்.எம்.ஷாங்ப்லியாங் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
2023 ஆம் ஆண்டில் மேகாலயாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | உண்மையான 'பப்பு' யார்? - வைரலாகும் திரிணமூல் எம்.பி.யின் பேச்சு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.