FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

முகக்கவசம் அணியுங்கள்: எம்.பி.க்களுக்கு ஓம் பிர்லா அறிவுறுத்தல்

கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க மக்களவையில் எம்.பி.க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். 

Updated On : 22 டிசம்பர் 2022, 11:30 am IST
பகிர்:

கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க மக்களவையில் எம்.பி.க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். 

சீனாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அங்கு பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத், ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) கரோனா பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதனிடையே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அவையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் சில எம்.பி.க்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். 

அதுபோல மாநிலங்களவையிலும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் சில எம்.பி.க்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments