மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங் ராஜிநாமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான ஆர்.சி.பி.சிங் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய உருக்குத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார்.
இதையும் படிக்க | முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா! குடியரசு துணைத் தலைவராகிறாரா?
Advertisement
Advertisement
இந்நிலையில் நாளையுடன் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில் ஆர்.சி.பி.சிங் ராஜிநாமா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஏற்கெனவே மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ராஜிநாமா செய்த நிலையில் ஒரே நாளில் இரண்டாவது அமைச்சரும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.