எளிதாக நீதி கிடைப்பது மிகவும் அவசியம்: பிரதமர் மோடி
நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புது தில்லி: நாட்டில் ஒரு வணிகத்தை நடத்துவதும் வாழ்வதும் எளிதாக இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அது போல நீதி கிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. இதுவரை நல்ல விருந்தை ருசித்தார்.. இப்போது..: உத்தவ் கடும் தாக்கு
அனைத்திந்திய மாவட்ட சட்டச் சேவை அதிகாரிகளுக்கான முதல் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர நாட்டின் மிக அருமையான காலம் இது. அடுத்த 25 ஆண்டுகளில் நாடு மிகப்பெரிய முன்னேற்றங்களைக் காண்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. நாட்டில் வணிகம் மேற்கொள்வதும், மனிதன் வாழ்வதும் எளிதாக இருக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அதுபோல நீதி கிடைப்பதும் எளிதாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறினார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க.. ஒரே குடும்பத்தில் 4 பிள்ளைகள் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆன அதிசயம்
மேலும் அவர் பேசுகையில், எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவரும் நீதித்துறையை அணுகுவது என்பது எளிதாக்கப்பட வேண்டும், அதை விட, அனைவருக்கும் சமமாக நீதி வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு, மிகவும் வலுவான சட்ட உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அவசியம். நீதித் துறையின் உள்கட்டமைப்புகளை வலுவாக்க கடந்த எட்டு ஆண்டுகளில் நடவடிக்கைகள் துரிதகதியில் நடந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.