FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரு பக்கம் போராட்டம்; மறுபக்கம் அக்னிபத் திட்டத்தில் சேர 94,000 விண்ணப்பம்

மத்திய அரசு அறிமுகம் செய்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஒருபக்கம் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கு 4 நாள்களில் 94,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.

1 பிப்ரவரி 2024, 3:08 pm IST
ஒரு பக்கம் போராட்டம்; மறுபக்கம் அக்னிபத் திட்டத்தில் சேர 94,000 விண்ணப்பம்
பகிர்:


மத்திய அரசு அறிமுகம் செய்த அக்னிபத் திட்டத்துக்கு எதிராக ஒருபக்கம் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கு 4 நாள்களில் 94,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.

கடந்த 14ஆம் தேதி அக்னிபத் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு அடுத்த நாள் முதல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. ரயில்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியிருந்தன.

இதற்கிடையே அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) முதல் பெறப்படுகின்றன. திங்கள்கிழமை காலை 10.30 மணி வரை அதாவது 4 நாள்களில் மட்டும் 94,281 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விமானப் படையில் சோ்வதற்கு வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை 5-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சக பேச்சாளர் பாரத் பூஷண் பாபு சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாகப் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ஆம் தேதி அறிமுகம் செய்தது.

17.5 வயது முதல் 21 வயதுக்கு உள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்; 4 ஆண்டுகளுக்குப் பிறகு இவா்களில் 25 சதவீதம் பேருக்கு நிரந்தர பணிவாய்ப்பு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதுகாப்புப் படைகளில் ஆள்சோ்ப்பு நடைபெறாத நிலையில், அக்னிபத் திட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் சோ்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக உயா்த்தப்பட்டது.

4 ஆண்டுகள் ராணுவ சேவைக்குப் பிறகு அக்னிவீரா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதாக மத்திய அரசின் அமைச்சகங்களும் துணை ராணுவப் படைகளும் வாக்குறுதி அளித்தன.

இதேபோல், மாநில காவல் துறையில் அக்னிவீரா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பாஜக ஆளும் மாநில அரசுகளும் வாக்குறுதி அளித்துள்ளன.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டவா்கள், அக்னிபத் திட்டத்தில் சோ்த்துக் கொள்ளப்பட மாட்டாா்கள் என்று முப்படைகளும் திட்டவட்டமாக கூறியுள்ளன. தாங்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என சான்று தர வேண்டுமெனவும், தோ்வா்கள் குறித்து காவலர்களிடம்ட சரிபாா்ப்பு நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments