FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அமோக வரவேற்பு: கவின் - நயன்தாராவின் ஹாய் படத்துக்கு கூடுதல் திரைகள், காட்சிகள்!

கவின் - நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் திரைப்படத்தின் திரைகள் அதிகரிப்பு குறித்து...

44 வினாடிகள் முன்பு
ஹாய் படத்தில் கவின் - நயன்தாரா. - படம்: எக்ஸ் / செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்.
பகிர்:

கவின் - நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாய் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் திரைகள், காட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான ஹாய் திரைப்படம் நேற்று (ஆக.28) திரையரங்குகளில் வெளியானது.

நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

பாடலாசிரியகாவும் லோகேஷ் கனகராஜிடம் உதவியாளராகவும் இருந்த விஷ்ணு எடவன் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், பாக்யராஜ், பிரபு, பூர்ணிமா, காவ்யா அறிவுமணி, விடிவி கணேஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படத்திற்கான திரைகளும் காட்சிகளின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளன.

summary

With tremendous love and an overwhelming response, Hi Movie gets extra screens and shows!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments