FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர்!

கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர் வெளியானது பற்றி...

கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர். - படம் - எக்ஸ்
பகிர்:

கவின் - நயன்தாரா நடித்துள்ள ஹாய் படத்தின் டிரைலர் இன்று (ஆக. 20) வெளியானது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தில், முக்கிய கதாபாத்திரங்களில் மறைந்த நடிகர் பாக்யராஜ், நடிகர்கள் பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ் போன்றவர்கள் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படம் கடந்த ஆக. 14 ஆம் தேதியே வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. ஆகையால், வரும் ஆக. 28 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. மேலும், தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The trailer for the movie Hi, starring Kavin and Nayanthara, was released today (August 20).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments