கவின் - நயன்தாராவின் ஹாய் பட டிரைலர் அறிவிப்பு!
கவின் - நயன்தாரா நடித்துள்ள ஹாய் பட டிரைலர் அறிவிப்பு குறித்து...
கவின் - நயன்தாரா நடித்துள்ள ஹாய் படத்தின் டிரைலர் நாளை (ஆக. 20) வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகர்கள் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தினை, ‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
Advertisement
Advertisement
இப்படம் கடந்த ஆக. 14 ஆம் தேதியே வெளியாகுமென படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில காரணங்களுக்காக வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. ஆகையால், வரும் ஆக. 28 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கவின் - நயன்தாரா ஆகியோர் படத்தின் டிரைலர் தேதியை அறிவித்துள்ளனர்.
தணிக்கை வாரியம் இத்திரைப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The trailer for the film Hi, starring Kavin and Nayanthara, is set to be released tomorrow (August 20).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.