பாஜக செய்வது மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே: ராகுல் காந்தி
மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே பாஜக அரசு செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே பாஜக அரசு செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதில் எந்தவித நிலையான திட்டமும் பாஜக அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பணமதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், சீன எல்லை ஆக்கிரமிப்பு என எதைப் பற்றியும் மோடி அரசு கவலைப்படுவதில்லை. ஆனால் மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.