முகப்பு
இந்தியா

முகக்கவசத்திற்கு ஓய்வு! விமானத்தில் இனி அவசியமில்லை!

விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய அரசு புதன்கிழமை இன்று (நவ.16) அறிவித்துள்ளது.  

Updated On : 16 நவம்பர் 2022, 6:02 pm IST
பகிர்:

விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என மத்திய அரசு புதன்கிழமை இன்று (நவ.16) அறிவித்துள்ளது.  

இது தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

மத்திய சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின்படி, விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது இனி கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுகிறது. 

Advertisement

கரோனா பெருந்தொற்று காரணமாக உள்ளூர் மற்றும் சர்வதேச விமான பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

பயணிகள் முன்னுரிமை அடிப்படையில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். ஆனால், முகக்கவசம் அணியாமல் பயணிப்பதற்கு இனி அபராதமோ அல்லது விமானப் பணியாள்ர்களின் நடவடிக்கையோ எடுக்கப்படாது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.