200 ரயில் நிலையங்களை சீரமைக்கத் திட்டம்! அமைச்சர்
நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை இன்று (அக்.3) தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை இன்று (அக்.3) தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் 200 ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு செய்ய ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது. 47 ரயில் நிலையங்களை சீரமைக்க ஒப்பந்தப் பணிகள் முடிந்துள்ளன. 32 ரயில் நிலையங்களில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் அப்பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் எனக் குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.