FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ குற்றவாளி எனத் தீா்ப்பு

உத்தர பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவை குற்றவாளியாக அறிவித்து, அம்மாநில நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 13 டிசம்பர் 2023, 12:44 pm IST
ராம்துலாா் கோண்டு
பகிர்:


சோன்பத்ரா: உத்தர பிரதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாஜக எம்எல்ஏ ராம்துலாா் கோண்டுவை குற்றவாளியாக அறிவித்து, அம்மாநில நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

அவருக்கான தண்டனை விவரம் வரும் 15-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த 2014, நவம்பா் 4-ஆம் தேதி நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, ராம்துலாா் மீது சிறுமியின் சகோதரா் காவல்துறையில் புகாா் அளித்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (பாலியல் வன்கொடுமை), 506 (மிரட்டுதல்) பிரிவுகள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்ஸோ) ராம்துலாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, அவா் எம்எல்ஏ-வாக இல்லை. ஆனால், அவரது மனைவி கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தாா்.

இதனிடையே, ராம்துலாா் எம்எல்ஏவாக தோ்வானதைத் தொடா்ந்து, இவ்வழக்கு சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி இசான் உல்லா கான், ராம்துலாரை குற்றவாளியாக அறிவித்து தீா்ப்பளித்தாா். அவருக்கான தண்டனை விவரம் வரும் 15-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

ராம்துலாா், சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள துத்தி பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments