FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

சுக்பீர் சிங் பாதலுக்கு கத்திக்குத்து! பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு!

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் - பிரதமர் மோடி - கோப்புப் படம்
பகிர்:

கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்துள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் மிகவும் பிரபலமான நான்டெட்டில் உள்ள ஹசூர் சாஹிப் குருத்வாராவுக்கு இன்று (ஆக. 13) பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வரும், ஷிரோமணி அகாலி தல் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் சென்றார்.

அப்போது, அங்கிருந்து நபர் ஒருவர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதில், அவருக்கும், அவரது சிறப்புப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருக்கும் படுகாயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீதான தாக்குதலுக்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த சுக்பீர் சிங் பாதலின் உடல்நிலை குறித்து அவரது மனைவி ஹர்சிம்ரத் கவுர் பாதலிடம் செல்போன் மூலம் பிரதமர் மோடி உரையாடி நலம் விசாரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுக்பீர் சிங் பாதலிடம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் செல்போன் மூலம் பேசி நலம் விசாரித்துள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதலின் மீதான தாக்குதல் செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஜனநாயகத்தில், கொள்கை வேறுபாடுகள் காரணமாக நிகழும் எந்தவொரு வன்முறையும் அனைத்து வகையிலும் கண்டிக்கத்தக்கது” எனக் கூறியுள்ளார்.

summary

PM Modi has inquired about the health of former Punjab DCM Sukhbir Singh Badal, who was injured in a stabbing attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments