FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

கத்திக்குத்து! சிகிச்சை முடிந்து பஞ்சாப் புறப்பட்டார் சுக்பீர் சிங் பாதல்!

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் பஞ்சாப் புறப்பட்டார்...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:01 pm IST
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல்... - கோப்புப் படம்
பகிர்:

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், அறுவைச் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்குப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் நாந்தேடிலுள்ள பிரபல மாதா சாஹிப் தேவன் ஜி முகத் எனும் சீக்கிய கோயிலில், கடந்த வியாழக்கிழமை (ஆக. 13) பஞ்சாப் முன்னாள் துணை முதல்வரும், ஷிரோமனி அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்பீர் சிங் பாதல் சென்றார்.

அப்போது, அங்கு காவலில் ஈடுபட்டிருந்த நிஹாங் எனும் பாரம்பரிய சீக்கிய காவல் படையைச் சேர்ந்த ஒருவர் சுக்பீர் சிங் பாதலை கத்தியால் குத்தி தாக்கினார். இந்தத் தாக்குதலில், சுக்பீர் சிங் மற்றும் அவருடைய சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் படுகாயமடைந்தனர்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுக்பீர் சிங் பாதலுக்கு சுமார் 90 நிமிடம் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்மூலம், தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவரது கையின் தசைநார்கள் மற்றும் நரம்புகள் சரிசெய்யப்பட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிகிச்சை முடிந்து வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் சென்ற சுக்பீர் சிங் விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்துக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து சுக்பீர் சிங் பாதல் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

“இந்த நாட்டிலும் பஞ்சாபிலும் அமைதியை விரும்பாத பல சக்திகள் இருக்கின்றன. ஷிரோமணி அகாலி தளம் அவர்களின் நோக்கங்களுக்குத் தடையாக இருக்கிறது என அவர்கள் கருதுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கடந்த 2024 ஆம் ஆண்டு சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸிலுள்ள தங்கக் கோயிலுக்குச் சென்றிருந்த சுக்பீர் சிங் பாதலை கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் இருந்து அவர் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.

summary

former Punjab DCM Sukhbir Singh Badal, who sustained serious injuries in a stabbing attack, has set out for his hometown after undergoing surgery.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments