இந்தியா

அமித் ஷா-க்கு வரலாறு தெரியாது: ராகுல் காந்தி விமர்சனம்

DIN

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குறித்த அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமித்ஷாவுக்கு வரலாறு தெரியாது என்று கூறினார்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே பாஜக முயற்சித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

மாநிலங்களவையில் திங்கள்கிழமை பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை ராகுல் காந்தி பேசியதாவது, “ஜவஹர்லால் நேரு அவரின் வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. வரலாற்றை மாற்றி எழுத முயன்று கொண்டிருக்கும் அவருக்கு உண்மையான வரலாறு தெரிந்திருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இது எல்லாமே மக்களின் கவனத்தை ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் இருந்து திசைதிருப்புவதற்காக செய்யப்படுபவை. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து பேசுவதற்கே பாஜக பயப்படுகிறது.

ஆனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தை தொடர்ந்து முன்னெடுக்கும். ஏழை, எளிய மக்களுக்கான உரிமைகள் கிடைப்பதற்கு காங்கிரஸ் போராடும்.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் பலத்த மழை பல மணி நேரம் மின் தடை

வாக்கு எண்ணும் மையத்தில் புதுவை தலைமை தோ்தல் அதிகாரி ஆய்வு

அகஸ்தீசுவரம் அருகே அடையாளம் தெரியாத நபா் தூக்கிட்டு தற்கொலை

‘டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ள சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்’

ஜரோப்பிய யூனியன் கல்வி உதவித்தொகை பெற திருப்பூா் மாணவா் தோ்வு

SCROLL FOR NEXT