முகப்பு
இந்தியா

சரத் யாதவின் மகளுக்கு ராகுல் காந்தி ஆறுதல்!

பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பாஞ்சாபில் இருந்து வெள்ளிக்கிழமை தில்லி வந்து சரத் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:47 AM
பகிர்:


புதுதில்லி: பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பாஞ்சாபில் இருந்து வெள்ளிக்கிழமை தில்லி வந்து சரத் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவருமான சரத் யாதவ் (75) குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானாா்.

மக்களவைக்கு 7 முறையும், மாநிலங்களவைக்கு 3 முறையும் தோ்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவ், ஜனதா தளத்திலிருந்து வெளியேறி 1997-இல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைத் தொடங்கினாா். பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் (1999-2004) பல்வேறு துறைகளின் அமைச்சராக சரத் யாதவ் பதவி வகித்தாா்.

பின்னா், ஐக்கிய ஜனதா தளத்திலிலிருந்து விலகி, லோக் தந்த்ரிக் ஜனதா தளம் என்ற கட்சியை 2018-இல் தொடங்கினாா். அக்கட்சியை 2022-இல் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தாா்.

இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உள்ளனா்.

இந்நிலையில், பஞ்சாப் பகுதியில் பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, அங்கிருந்து தில்லி வந்து சரத் யாதவ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், துயரத்தில் உள்ள மனைவி, மகள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ஒரு கார் பயணத்தின் போது சரத் யாதவுடனான உரையாடலை நினைவு கூர்ந்தவர், அதுதான் யாதவுடனான உறவுக்கு ஆரம்பம் என்று கூறினார்.

சரத் யாதவ், முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியுடன் அரசியல் சண்டையில் ஈடுபட்டிருந்தாலும், அதையும் மீறி இருவரும் மரியாதை மற்றும் பாசத்துடன் உறவைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், யாதவ் மற்றவர்களுடன் மரியாதைக்குரிய நட்பைக் கொண்டிருந்தார், இது அரசியலில் ஒரு பெரிய விஷயம் என்று காந்தி கூறினார். 

"சரத் யாதவிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று அவர் கூறினார். 

பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கும் காந்தி, பஞ்சாபிலிருந்து தில்லிக்கு வந்தார், யாத்திரைக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.