முகப்பு
இந்தியா

ரயில் விபத்து: உடல்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை!

ஒடிஸாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 ஜூன் 2023, 1:23 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஒடிஸாவில் நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண மரபணு பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளவர்களின் உடல்கள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 193 உடல்களில் இருந்து மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒடிஸா மாநில அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வெள்ளிக்கிழமை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிஸாவின் பாலசோா் மாவட்டம், பஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

Advertisement

அதன் பெட்டிகள், சரக்கு ரயில் மீதும் அருகிலிருந்த தண்டவாளங்களிலும் சிதறி விழுந்தன. அப்போது, அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் கோரமண்டல் ரயில் பயணணம் செய்தவா்களில் 275 போ் உயிரிழந்தனா். 1,100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். அந்தப் பகுதியில் தண்டவாளங்கள் பலத்த சேதமடைந்தன.

பலியான 275 பேரில் 101 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது. காயமடைந்த  200க்கும் மேற்பட்டோர் ஒடிஸாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அடையாளம் காணப்பட்ட 80 உடல்களில், 55 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று ஒடிஸா அரசு தெரிவித்துள்ளது. 

ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் மத்திய புலனாய்வுக் குழு அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.