முகப்பு
இந்தியா

குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 3 ஊராட்சி மக்கள் தர்ணா!

அவிநாசி அருகே 3 ஊராட்சிகளில் ஆற்று குடிநீர் வராததை கண்டித்து, அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 9 ஜூன் 2023, 12:40 pm IST
அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனம் 3 ஊராட்சி மக்கள்
பகிர்:

அவிநாசி: அவிநாசி அருகே 3 ஊராட்சிகளில் ஆற்று குடிநீர் வராததை கண்டித்து, அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அமர்ந்து வெள்ளிக்கிழமை காலி குடங்களுடன் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்னேரி பாளையம், பழங்கரை, குப்பாண்டம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆற்று குடிநீர் வருவதில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை காலை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 

அவிநாசி ஒன்றிய நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் தர்னா போராட்டம் தொடர்கிறது.  இதையடுதது போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments